வணிகம்

லங்கா சதொச வழங்கும் காய்கறி சலுகை

(UTV | கொழும்பு) –  நாட்டிலுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக, நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்றினை மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன.

முதற்கட்டமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள மக்களுக்கு காய்கறிகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வசதியேற்படுத்தப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 75 சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் காய்கறிகளை பெறமுடியும்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் இணையும் HNB