உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.

இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (31) அவர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட்

காத்தான்குடி ஆரையம்பதியில் வெடிப்புச் சம்பவம் – இளைஞர் காயம்!

editor

உயர்தர பரீட்சை குறித்து வௌியான அறிவிப்பு

editor