கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (30) தள்ளுபடி செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.