அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரிஷாட் பதியுதீனுக்கும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம் பெற்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது, இலங்கையிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு பயணிக்கும் அகதிகளின் நிலைமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தரப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related posts

கோட்டா கோ கிராமத்தின் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

editor