வகைப்படுத்தப்படாத

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணரும் ஜப்பான் பட்டத்து இளவரசி

(UTV|JAPAN)-ஜப்பானில் தற்போது மன்னராக இருப்பவர் அகிடோ. இவருக்கு வயது 84. இவருடைய மூத்த மகன் நருகிடோ பட்டத்து இளவரசராகவும், அரவது மனைவி மசாகோ பட்டத்து இளவரசியாகவும் உள்ளனர். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நிலையின் காரணமாக அகிடோ பதவி விலக முடிவெடுத்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் திகதி அவர் பதவி விலகுகிறார்.அதற்கு அடுத்தநாள் மே 1-ந் திகதி, பட்டத்து இளவரசரான நருகிடோ மன்னராகவும், அவரது மனைவியும் பட்டத்து இளவரசியுமான மசாகோ ராணியாகாவும் அரியணை ஏற இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பட்டத்து இளவரசி மசாகோ தான் அடுத்த ஆண்டு நாட்டின் ராணியாக பதவியேற்க இருப்பதை பாதுகாப்பற்றதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் ஜப்பான் மக்களுக்கு தன்னால் முடிந்த வரையில் சிறந்த சேவையை அளிப்பதற்கு தான் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.மன அழுத்தம் தொடர்பான பிரச்சினையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த மசாகோ அதில் இருந்து தான் மெல்ல மெல்ல மீண்டு வருவதாக கூறி இருக்கிறார்.

எனவே இனி தான் அதிக அளவிலான அரசு பணிகளை மேற்கொள்ளப்போவதாக அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

 

 

 

 

 

 

 

 

Related posts

980kg of beedi leaves found at Erambugodella

24 மணிநேரம் இடைநிறுத்தப்படவுள்ள நீர் விநியோகம்

Navy arrests a person with ‘Ice’