உள்நாடு

ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாவது தடவையாக பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளைய தினம் (18) ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 5000 பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு

மீண்டும் கொழும்பு குப்பைகள் புத்தளத்தில் – இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்.

editor

பதுளை மாவட்டத்தில் 11 வேட்புமனுக்கள் நிராகரிப்பு