உள்நாடு

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 பேர் பலி!

மனித கடத்தல்காரர்களால் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 60 பேர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்: பிரதிவாதி மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

editor

இன்றும் பல பிரதேசங்களில் பலத்த மழை

editor