உலகம்

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், Mi-8 ரக ஹெலிகொப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம், அங்காரா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த ஆன்டோநோவ் அவ் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்

யாசகர்களை ஒழிக்க இந்தியா திட்டம்!

அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு மகாராணி அனுமதி