சூடான செய்திகள் 1

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நேற்று நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரது பதவிக்காலம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!