உள்நாடு

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்களை, 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொடவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இர்ஷடீன் ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரிய ஜனசுந்தர, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கொரியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைப்பு!

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!