உள்நாடு

ரயில் போக்குவரத்து தொடர்பில் வெள்ளியன்றே தீர்மானம்

(UTV | கொழும்பு) –  ரயில் போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே இறுதி தீர்மானம் எட்டப்படும் என ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போதே இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரை சரக்கு ரயில்கள் மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் Founders Day 2024

அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான புதிய சுற்றறிக்கை

அதிவிசேட வர்த்தமானி வெளியானது