உள்நாடு

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (12) நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனரென ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

கொரோனா பரவல் நிலையில் தங்களுக்கு அவசியமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தங்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ரயில் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு

அரசாங்கத்துக்குள் மீண்டும் வரும் ராஜபக்சர்கள் நாட்டில் நடக்கப்போவது என்ன?

ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்