வணிகம்

ரயில் சேவையில் 800 கோடி ரூபாய் நட்டம்

(UTV|கொழும்பு) – 2019ஆம் ஆண்டு இலங்கை ரயில் சேவையில் 800 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ரயில் திணைக்கள ஊழியர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச போக்குவரத்து துறை தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு அதிகரிக்கும்?

Sri Lanka Next சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி ஆரம்பம்