சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் நேற்றைய தினம் 12 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தப் போராட்டம் காரணமாக நேற்றிரவு இடம்பெறவிருந்த தபால் நேர் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை (VIDEO)

நியூயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பான விவாதம் இன்று

அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்