உள்நாடுபிராந்தியம்

ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலத்த காயம்

ரயிலில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன் பிரதேச வைத்தியசாலையில் இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பொடி மெனிக்கே ரயில் இயக்கப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது குறித்த பெண் ரயிலில் பாய்ந்துள்ளதாகவும், விபத்தில் படுகாயமடைந்த பெண் நீண்ட நேரம் ரயில் பாதைக்கு அருகில் நின்றுகொண்டு இருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கொவிட் தொற்றினால் 98 இலங்கையர்கள் மரணம்

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் சொகுசு கார் மோதி விபத்து

editor