கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.