உள்நாடு

ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே அவர் நேற்று மாலை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று காலையும் மாலையும் சில ரயில் சேவைகளே முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் பெருமளவான பயணிகள் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணித்து வரும் நிலையிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

மூன்று STF முகாம்கள் முடக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

editor

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்  முன்னெடுப்பு