சூடான செய்திகள் 1

ரயன் வேன் ரோயன் உட்பட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்

(UTV|COLOMBO) பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்ரோயன் உள்ளிட்ட 5 பேர் இன்று(04) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சந்தேகநபர்களை குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

முஸ்லிம் திருமண சட்ட திருத்தம்; ஆராய நால்வர் அடங்கிய குழு