அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் திகதி குறித்து வைத்தியர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சட்டக் குழு, அவருக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் பல விசேட சமர்ப்பணங்களை சமர்ப்பித்திருந்தது.

ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து நோய்கள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட அதேநேரம், அவரது இதயத்தில் உள்ள 4 முக்கிய தமனிகளில் 3 அடைபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இதய திசுக்களின் இறப்பு மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அந்த நோய்கள் தொடர்பான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்னவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த