உள்நாடு

ரணிலை பாராட்டிய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ!

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார்.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார்

Related posts

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது

நீதவான் சுனில் அபேசிங்விற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை