கிசு கிசு

‘ரணிலுக்கு வாய்ப்பளியுங்கள்’

(UTV | கொழும்பு) – ‘ரணில் வீட்டுக்குப் போ’ என்று கூறி நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தாமல், புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது பணியைத் தொடர குறைந்தது இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எமது மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டாலும், நெருக்கடியை தீர்க்கும் நடவடிக்கையை மக்கள் காணமுடியும் என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயதரணி தர்ம தேசிய சபை என்ற வகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இதேவேளை, அத்துரலியே ரதன தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நியமிக்கப்படவுள்ள ஆறு நாடுகளுக்கான இராஜதந்திரிகள் விபரம்

எதிர்வரும் வாரமும் மின்வெட்டு தொடரும் – PUCSL

PHOTOS-முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு திருமணம்