உள்நாடு

ரணிலுக்கு எதிரான மனு பரிசீலனைக்கு திகதி நியமனம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலிக்க அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) உத்தரவிட்டது.

நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, லபார் தாஹிர் மற்றும் டி. எம். சமரக்கோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை மார்ச் 30-ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டனர்.

கடந்த அரசாங்கத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு செயலகம் தொடர்பான பல செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்பு என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தமக்கு எதிராக பல பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக இருந்த போது ஊழல் ஒழிப்பு செயலகம் தனக்கு கீழ் இயங்கவில்லை எனவும் அதன் செயற்பாடுகளில் தான் தலையிடவில்லை எனவும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விட்ட தவறுகளை இந்த அரசாங்கம் செய்யக் கூடாது – நாமல் எம்.பி

editor

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை – ஆணைக்குழுவில் இருந்து வெளியேறல்