கேளிக்கை

ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த தனுஷ்!!

(UDHAYAM, COLOMBO) – பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.

இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியானது.

மேலும் இந்த படத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான புரளிகள் சுற்றி வருவதால் படக் குழுவினர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே படத்தலைப்பை அறிவித்துள்ளனர்.

Related posts

400 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் ” ROWDY BABY”

‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் காதலரை மணந்தார்

விதியின் கொடூரமான முடிவு : புனித் மறைவுக்கு மோடி இரங்கல்