உள்நாடு

யோஷித, டெய்ஸியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு!

யோஷித ராஜபக்க்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது. 

இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர் பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

அத்துடன் விசாரணையை மே 30 ஆம் திகதி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Related posts

ஜனாதிபதிக்கும் நியூசிலாந்து பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

editor

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது – ஜனாதிபதி அநுர

editor