உலகம்

யெமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ஹவுதி போராளிகளை குறிவைத்து யெடனின் சனா விமான நிலையத்தின் மீது இரண்டாவது முறையாக நேற்று (28) தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுதிகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

கடந்த மே 6 அன்று சனாவில் உள்ள விமான நிலையத்தை இஸ்ரேல் கடைசியாகத் தாக்கியது.

இதில் விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது.

அதைத்தொடர்ந்து மே 17 அன்று சனாவிற்கு சில விமானங்கள் மீண்டும் தொடங்கிய நிலையில் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

-அல்ஜஸீரா

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி சென்ற படகு தடுத்து நிறுத்தம் – கிரெட்டா தன்பெர்க் குழுவை கைது செய்த இஸ்ரேல்

editor

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருடங்களும் மனைவிக்கு 7 வருடங்களும் சிறைத்தண்டனை

editor