கேளிக்கை

யூடியூபில் புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’

(UTV | இந்தியா) – விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing100MViews என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர். ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும், வீடியோ பாடலும் தனித்தனியே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததில்லை. தற்போது வாத்தி கம்மிங் பாடல் அந்த உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

ஐஸ்வர்யா தனுஷ் : கொவிட் தொற்று

பெண்ணாக மாறிய அனிருத்?