உள்நாடுபிராந்தியம்

யாழ், வாள்வெட்டுச் சம்பவத்தில் கைவிரலை இழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலை பொறுப்பாளரான இளைஞரே கைவிரலை இழந்தவராவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சிய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வாள் வெட்டில் இளைஞரின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில்யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலை நடத்திய இருவரையும் பொலிஸார் இனம் கண்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு