உள்நாடு

யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் விடுதலை

(UTV|கொழும்பு) – இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ஒரு பெண் உட்பட 16 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் 4 பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 17 பேர் இன்றைய தினம் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப் பணம் செலுத்த முடியாது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts

இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor