உள்நாடு

யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார்.

அதற்கு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகர சபை கட்டட பணிகள் தொடர்பிலும் ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் முதல்வர் விளக்கியுள்ளார்.

Related posts

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்