உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!

(UTV | கொழும்பு) –   யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் (J/07) உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், எதிருவரும் 2023.07.12 ஆம் திகதி அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அன்றைய தினம் (12) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

இன்று 7 1/2 மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை