உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கோர விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியைச் சேர்ந்த, செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான 27 வயது இளைஞர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

ஈடிஐ – சுவர்மஹல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மத்திய வங்கியால் நிறுத்தம்

சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 182 பேர் கைது