உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன், நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண்ணொருவர் திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

editor

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா