உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார்.

இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த யுவதி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-கஜிந்தன்

Related posts

பெண் ஒருவர் எரித்துக் கொலை – மகன், மகள், மருமகள் கைது

editor

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும்

editor

விகாரையை நிறுத்திய கிழக்கு ஆளுனருக்கு எதிராக கொதித்தெழும் தேரர்கள்!