உள்நாடு

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் அதிரடியாக கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில் பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

Related posts

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor

மன்னார் குடிநீர் பாதுகாப்பானது – வதந்திகளை நம்ப வேண்டாம்

editor

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!