உள்நாடுபிராந்தியம்

யானை தந்தத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பெண் சிலை – ஒருவர் கைது

யானை தந்தத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பெண் சிலையுடன் சந்தேக நபரொருவர் ஹொரகொல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரகொல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா – மல்வானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் சிலையின் மதிப்பு பல இலட்சம் ரூபா என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இந்த பெண் சிலையை விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரகொல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

லஞ்ச் சீட் பாவனைக்கு தடை!

வீடியோ – ரயில் வேலைநிறுத்தம் நியாயமற்றது – போக்குவரத்து அமைச்சு

editor