உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்து – ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (25) 9.30 மணியளவில் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியை நோக்கி வந்த போதே விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனிச்சங்கேணி பாலத்தில் மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில், ஓட்டமாவடி – பதுரியா நகர் ஆலையடி வீதியைச் சேர்ந்த முகம்மது உசனார் அப்துல் சாஜித், ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த முகம்மது அஸ்மி முகம்மது அஸாம் எனும் 19 வயதுகளுடைய இரு இளைஞர்களே மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த இரு இளைஞர்களின் உடல்களும் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.

மரணமடைந்த இரு இளைஞர்களின் உடல்களும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை : அவசர நிலைமையில் சுகாதார தரப்பு ஒத்துழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அனுதாபச் செய்தி!

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்!