உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

9 மில்லிமீற்றர் ரக தோட்டா கொண்ட பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், தோட்டாவும் தோட்டா உறையும் வீட்டுக்கு முன்னால் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, மோட்டார் சைக்கிள் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மட்டக்களப்பிலும் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம்!

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை