கிசு கிசு

மோடி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கையுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இரு விஜயங்களும் பார்க்கப்படுகின்றன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான விஜயங்களை முடித்துக்கொண்டுள்ள நிலையில் தொடர் விவாதங்களுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)

இலங்கையர்களை தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி!

தமிழ் மொழியை அகற்றிய உங்களால் சீன மொழியை அகற்ற முடியுமா? [VIDEO]