உள்நாடு

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 10 இலட்சம் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி, எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மீதமுள்ள 600,000 தடுப்பூசிகளை கொழும்பு பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகித்த பின்னர் கேகாலை பகுதி மக்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வரவிருக்கும் ஃபைசர் தடுப்பூசி வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Related posts

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்

editor

ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தம்

editor

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை