அரசியல்உள்நாடு

மை பூசும் விரலில் மாற்றம் – தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கினார்.

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசினோம்.பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளன. எனவே, இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும்.

இன்னும் 3 நாட்களில் இடம்பெறவுள்ள 10ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனநாயக ரீதியானதும், அமைதியான முறையிலுமான தேர்தலுக்காக நாமனைவரும் கைகோர்ப்போம் – சஜித் பிரேமதாச

editor

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்