சூடான செய்திகள் 1

மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – மேல் மாகாணத்தில் இன்று(29) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பு – மக்கள் அவதானம்

மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு