வகைப்படுத்தப்படாத

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

(UTV -கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் பகல் 12.30 இற்கு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

 

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Related posts

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 3வது கப்பல்

Boris Johnson to be UK’s next prime minister

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க யோசனை