உள்நாடு

மேலும் 65 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து மேலும் 65 பேர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1,122 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1859 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 725 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!

பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை

இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில்..