உள்நாடு

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்றுக்குள்ளான மேலும் 6 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,676 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 206 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2893 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் ராஜபக்ஷர்கள் கிளர்ச்சிக்கும் வேறுபாடு இல்லை

மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்