உள்நாடு

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நாடு திரும்பமுடியாமல் இருந்த மேலும் 322 பேர் இன்று(30) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எட்டு இலங்கையர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மேலும் 272 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை கட்டாரின் டோஹாவிலிருந்து 42 இலங்கையர்கள் அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மஹிந்த, மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு!

டேன் பிரியசாத் கொலை – முக்கிய சந்தேக நபர் கைது

editor

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor