உள்நாடு

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 11,709 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இதுவரை வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கையானது 443ஆக அதிகரித்துள்ளது.

Related posts

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

editor