உள்நாடு

மேலும் 16 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,638 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 231 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை