உள்நாடு

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில், மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கேகாலை, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களில் 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி

கேகாலை மாவட்டத்தின் கேகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை அதிகாரப்பிரிவின் மருதமுனை -3 கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

16,000 ஆசிரியர்களை நியமித்து பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது 

தேசிய மக்கள் சக்தியின் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது