உள்நாடு

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டின் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு – தலங்கம – தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விஜயமாவத்தை, ஜயகத் மாவத்தை பகுதிகளும், தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, சமனல மாவத்தை, அஞ்சல் பெட்டி சந்தி ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் நாவலப்பிட்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹன்கம கொஸ்கல தோட்டம் மற்றும் போபெத்த பகுதி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று முதல் மாற்றம்

“புதிய கட்டணத்தின் கீழ் பேரூந்துகள் சேவையில், நட்டம் எனில் நிறுத்தப்படும்”

பலஸ்தீனத் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor