உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒரு புதிய கொரோனா நோயாளி அடையாளம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒரு கொவிட் 19 தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவருடன் நெருங்கிய பழகிய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2731 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 656 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி பாரளுமன்ருக்கு

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

மேற்கு கொள்கலன் முனைய ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனம் அறிவிப்பு